மகளிர் தின வாழ்த்துக்கள்


நீல வானுக்கு கீழே
தழைக்கும் நிலம் போலே
உன் நிழலுக்கு கீழே
பிழைக்கிறோம்

வானின்று வரும் மழையால்
துளிர்க்கும் உயிர்போலே
உன் வலியுடன் பிறக்கும்
கருணையால் துளிர்க்கிறது மனிதம்

காற்று வெளியெங்கும்
காதலை எழுதும் கண்கள் -
கால் சலங்கை ஓசையிலே
கற்பொடும் நீதியை ஒலிக்கும் பெண்மை

சிந்தும் குறிப்பில் பிறக்கிறது
சிற்பம் கவிதை ஓவியம் எல்லாம் -
சின்னஞ்சிறு ஊடல்களிலே
சிக்கிக் கிடக்கிறது வாழ்வின் ருசி

மந்தியின் வால் மடக்கி
மனிதனை பிறப்பித்து -
முந்தியில் நீ திரித்த
முழுக்கதையே நாகரீகம்

காட்டு விதை பொறுக்கி
கல்லிடுக்கில் இட்டுவைத்து -
விளைந்த கனியோடு
விவசாயம் நீ கொடுத்தாய்

விண்ணேறும் துறையிலும்
முன்னேறு பிடிப்பவளே -
பெண்மை நீடித்து உலகில்
நன்மை வாழட்டும்.