வெறும் பூக்கள்

பிறகு ஒரு நாளில்
நாம் நின்று பேசி, சிரித்து
கவிதை பயின்ற இடத்தில்
வெறும் பூக்கள் மட்டுமே
பூத்திருந்தன

நீ  கனவுகளை மறந்து தூரம் போய்விட்டாய்
நான் கவிதைகளை இழந்து பாரம் சுமக்கிறேன்.




No comments: