காதலி வராத நாளின் வகுப்பறை


நிலவில்லாத நாளிலும் 
இரவு விழித்துதான் இருந்தது 
நட்சத்திரங்களோடு. 
காதலி வராத நாளின் வகுப்பறை

இரவுக்கு முன்பே வந்து நிலா 
வெயில் காய்வதும் உண்டு
வகுப்புகள் தொடங்காத நேரம்

ஒரு சந்திக்காலம் என்பது இதுவரை 
ஒளியும் இருளும் 
கரைந்து பிணையும் கனவே.No comments: