ஊசித்தும்பி
ஒரு தேன்துளியின் எடையில்
கால்பங்கே இருக்கும் ஊசித்தும்பி

அதனினும் மெல்லிய
அளவிலும் நுண்ணிய
நெல் பூவில் வந்து ஒட்டுகிறது

கடுகினும் சிறியதுளி
தேன்கண்டு உண்டபின்பு

மின்னணுவின் துரிதத்தில்
கண்ணுக்குச் சிக்காமல் படபடக்கிறது
அதன் கண்ணாடிச் சிறகு

தொடுவானம் வரை இருக்கும்
நெல்வயலின் ருசி - அந்தத்
தும்பிக்குள் விழுந்து பறக்கிறது.No comments: